அருண் ஜெட்லி மரணம்: அத்வானி, ராஜ்நாத் சிங் நேரில் அஞ்சலி

சனிக்கிழமை, 24 ஆகஸ்ட் 2019      இந்தியா
rajnath singh tribute jetley demise 2019 08 24

புது டெல்லி : டெல்லியில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடலுக்கு பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று காலமானார். அவரது உடல் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் டெல்லியில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. டெல்லியில் வைக்கப்பட்டு உள்ள அருண் ஜெட்லி உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. செயல் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடலுக்கு பா.ஜ.க. மூத்த தலைவர் எல் கே அத்வானி மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து