எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆன்டிகுவா : வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 297 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் 222 ரன்களும் எடுத்தன.அடுத்து 75 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2-வது இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் (16 ரன்) நடுவரின் தவறான எல்.பி.டபிள்யூ.க்கு இரையானார். தொடர்ந்து லோகேஷ் ராகுல் 38 ரன்னிலும், புஜாரா 25 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இதன் பின்னர் 4-வது விக்கெட்டுக்கு கேப்டன் விராட் கோலியும், துணை கேப்டன் ரஹானேவும் கூட்டணி அமைத்து அணியை சரிவில் இருந்து காப்பாற்றினர். 17 ரன்னில் இருந்த போது கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பித்த ரஹானே 48 ரன்னில் எல்.பி.டபிள்யூ. ஆகி இருக்க வேண்டியது. வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டி.ஆர்.எஸ். வாய்ப்பை பயன்படுத்தாததால் ரஹானே தப்பி பிழைத்தார். நிதானமாக ஆடிய இருவரும் தங்களது அரைசதத்தை கடந்தனர். 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்திருந்தது. கோலி 51 ரன்களுடனும், ரஹானே 53 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். 4 வது நாள் ஆட்டத்தில் வந்த வேகத்திலேயே கேப்டன் விராட் கோலி (51 ரன்) பெவிலியன் திரும்பினார். இதையடுத்து ரஹானேவுடன், ஹனுமா விஹாரி ஜோடி சேர்ந்தார். இருவரும் வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை திறம்பட எதிர்கொண்டு ரன்கள் சேகரித்ததுடன், முழுமையாக ஆதிக்கம் செலுத்தினர். இதனால் இந்தியாவின் ஸ்கோர் வலுவான நிலையை நோக்கி பயணித்தது. அபாரமாக ஆடிய ரஹானே தனது 10-வது சதத்தை எட்டினார். 2 ஆண்டுகளுக்கு பிறகு அவர் அடித்த முதல் சதம் இதுவாகும். ரஹானே 102 ரன்னில் கேட்ச் ஆனார். 7 ரன்னில் கன்னி சதத்தை நழுவ விட்ட விஹாரி 93 ரன்களில் (10 பவுண்டரி, ஒரு சிக்சர்) வீழ்ந்தார். ரிஷாப் பண்ட் 7 ரன்னில் ஏமாற்றம் அளித்தார்.இந்திய அணி 2-வது இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 343 ரன்கள் சேர்த்து ‘டிக்ளேர்’ செய்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீசுக்கு 419 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்த இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு துவக்கத்திலே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் சார்பில் முதலாவதாக களமிறங்கிய பிராத் வெயிட் 1 ரன்னும், ஜான் சேப்பல் 7 ரன்னும் எடுத்து பும்ரா பந்து வீச்சில் நடையை கட்டினர். இதைத்தொடர்ந்து பும்ரா மற்றும் இஷாந்த் சர்மா பந்து வீச்சில் மிரட்டினர். இதனால் வெஸ்ட் இண்டிஸ் அணியில் அடுத்து களமிறங்கிய புரூக்ஸ் 2 ரன்னும், ஹெட்மயர் 1 ரன்னும், டேரன் பிராவோ 2 ரன்னும், ஷாய் ஹோப் 2 ரன்னும், கேப்டன் ஜேசன் ஹோல்டர் 8 ரன்னும் எடுத்து மளமள வென தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இந்திய பவுலர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வந்தவேகத்தில் வெஸ்ட் இண்டிஸ் அணி வீரர்கள் வெளியேறினர். இதைதொடர்ந்து களமிறங்கிய ரோஸ்டன் சேஸ் 12 ரன்களும், கேப்ரியல் ரன் ஏதும் எடுக்காமலும் முகமது சமி பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர். அடுத்ததாக கேமர் ரோச் மற்றும் கம்மின்ஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடியில் கேமர் ரோச் அதிரடி காட்டினார். இதனால் அணியின் ஸ்கோர் ஒரளவு உயர்ந்தநிலையில் கேமர் ரோச் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். கம்மின்ஸ் 19 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் வெஸ்ட் இண்டிஸ் அணி 26.5 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 100 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேமர் ரோச் 38 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக அபாராமாக பந்து வீசிய பும்ரா 7 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளும், முகமது சமி 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். இதன்படி இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டிஸ் அணியை வீழ்த்தியது.
இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 12 hours ago |
மினி பான் கேக்6 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
ஓடிடி பிளஸ் தளத்தை துவங்கி வைத்த சீனுராமசாமி
06 May 2024தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்களாவது வெளியாகி வரும் நிலையில், பல சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
கிடைக்கும் வாய்ப்புகளை சிறப்பாக செய்கிறேன் - அர்ஜூன் தாஸ்
06 May 2024தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ்.