முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிங்கப்பூரில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை - இந்தியருக்கு ஆறரை ஆண்டு சிறை தண்டனை

செவ்வாய்க்கிழமை, 3 செப்டம்பர் 2019      உலகம்
Image Unavailable

சிங்கப்பூர் : சிங்கப்பூரில் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை தந்த இந்தியருக்கு ஆறரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை சேர்ந்த திருச்செல்வம் மணியம் என்பவர் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். இவர் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை தந்ததாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 20 தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில்  இந்த வழக்கில் இறுதிக்கட்ட வாதம் நடைபெற்றது. பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பாக அரசு வக்கீல் ஸ்ருதி போப்பனா வாதாடினார்.

அவர் பேசும்போது, சம்பவத்தன்று பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது துணையும் மது அருந்திய காரணத்தால் பஸ் ஸ்டாப் அருகே உள்ள பெஞ்சில் (இருக்கையில்) ஓய்வெடுக்க இருந்துள்ளனர். பின்னர் அவர்கள் இருவரும் போதையில் மயங்கிய நிலையில் இருந்ததை மணியம் கவனித்துள்ளார். பின்னர் அந்த பெண்ணை வேறு ஒரு இடத்திற்கு கொண்டு சென்று பாலியல் தொல்லை தந்துள்ளார். அந்த பெண் கண்விழித்து போலீசை அழைத்ததால் அவர் தப்பியோடினார். பின்பு பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார் என்றார்.

திருச்செல்வமும் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவருக்கு ஆறரை ஆண்டுகள் சிறை தண்டனையும் , 3 பிரம்படியும் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து