நான் மீண்டும் அதிபரானால் வர்த்தக ஒப்பந்தம் மிகவும் கடினமாகி விடும் - சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

வியாழக்கிழமை, 5 செப்டம்பர் 2019      உலகம்
trump 2019 06 30

வாஷிங்டன் : அடுத்த ஆண்டு (2020) நடைபெறும் அதிபர் தேர்தலில் ஒருவேளை தான் வெற்றி பெற்று மீண்டும் ஜனாதிபதியானால் சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தம் மிகவும் கடினமானதாகி விடும் என டிரம்ப், சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்கா - சீனா இடையே ஒரு ஆண்டுக்கும் மேலாக வர்த்தகப்போர் நீடிக்கிறது. இருநாடுகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை வெற்றி அடையாத காரணத்தால், நிலைமை மோசமாகியுள்ளது. அண்மையில், ரூ. ஏழே முக்கால் லட்சம் கோடி மதிப்பிலான சீனப் பொருட்களுக்கு அமெரிக்கா 15 சதவீதம் கூடுதல் வரி விதித்தது. இதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு (2020) நடைபெறும் அதிபர் தேர்தலில் ஒருவேளை தான் வெற்றி பெற்று மீண்டும் ஜனாதிபதியானால் சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தம் மிகவும் கடினமானதாகி விடும் என டிரம்ப், சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், சீனாவுடனான பேச்சுவார்த்தைகளில் நாங்கள் மிகச் சிறப்பாக செயல்படுகிறோம். ஆனால் சீனாவோ அமெரிக்காவின் புதிய நிர்வாகத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்புகிறது. ஆனால் அதுவரை காத்திருக்கும் பட்சத்தில், சீனாவின் வேலைவாய்ப்புகளும், நிறுவனங்களும் கடுமையான பாதிப்புகளை சந்திக்க நேரிடும். ஒருவேளை மீண்டும் நான் அதிபராக தேர்வாகும் பட்சத்தில் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வது என்பது மிகவும் கடினமானதாகி விடும் என்று தெரிவித்துள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து