முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏழுமலையானை அருகில் நின்று தரிசிக்க ரூ. 20,000 கட்டணம்: திருப்பதி தேவஸ்தானம் திட்டம்

வெள்ளிக்கிழமை, 6 செப்டம்பர் 2019      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பதி ஏழுமலையானை மிக அருகில் சென்று தரிசிக்க ரூ. 20 ஆயிரத்தை கட்டணமாக நிர்ணயிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்காக இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் ஏழுமலையான் கோவில் கட்டப்பட்டு வருகிறது. திருப்பதி ஏழுமலையான் ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் இந்த ஆலயங்களை திருமலை - திருப்பதி தேவஸ்தானமே கட்டி வருகிறது. தமிழ்நாட்டில் கன்னியாகுமரியில் சமீபத்தில் பிரமாண்டமான ஏழுமலையான் ஆலயம் கட்டி திறக்கப்பட்டது.

சென்னையிலும் திருப்பதி ஏழுமலையானுக்கு மிகப்பெரிய ஆலயம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இப்படி கட்டப்படும் ஆலயங்களுக்கு கோடிக்கணக்கில் பணம் தேவைப்படுகிறது. இதற்காக நிதி திரட்ட ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆலய நிர்மான டிரஸ்ட் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த டிரஸ்ட் பல்வேறு வகைகளிலும் நிதி திரட்டும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக வி.ஐ.பி.க்கள் சிறப்பு தரிசன கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏழுமலையானை மிக விரைவில் தரிசனம் செய்து விட்டு செல்ல வேண்டும் என்று விரும்பும் ஒவ்வொரு வி.ஐ.பி.க்கும் தலா ரூ. 20 ஆயிரம் கட்டணம் வசூலிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த கட்டணத்தில் தரிசனம் செய்ய வரும் வி.ஐ.பி.க்களை மற்ற வழக்கமான வி.ஐ.பி.க்களுக்கு முன்னதாகவே தரிசனம் செய்ய வைக்க திட்டமிட்டுள்ளனர். மேலும் கட்டண சேவை வி.ஐ.பி.க்களுக்கு தேவையான மற்ற வசதிகளையும் செய்து கொடுக்க உள்ளனர்.

குறிப்பாக ரூ. 20 ஆயிரம் கட்டணம் செலுத்தி தரிசனம் செய்ய வருபவர்கள் திருப்பதி ஏழுமலையானை அருகிலே சென்று தரிசிக்க வைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதாவது மற்ற பக்தர்கள் 3 வழிபாதையில் திரும்பி சென்று விடும் நிலையில் ரூ. 20 ஆயிரம் கட்டணம் செலுத்தி வருபவர்களை குலசேகர ஆழ்வார்படி வரை அனுமதிக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. குலசேகர ஆழ்வார்படி வரை சென்றால் திருப்பதி ஏழுமலையானை மிக மிக அருகில் சென்று தரிசிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் ரூ. 20 ஆயிரம் கட்டண தரிசனத்துக்கு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தினமும் 200 முதல் 300 பேர் வரை ரூ. 20 ஆயிரம் கட்டணத்தில் ஏழுமலையானை தரிசிக்க வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து