141-வது பிறந்த நாள்: வரும் 17-ம் தேதி பெரியார் உருவப்படத்திற்கு ஓ.பி.எஸ்- இ.பி.எஸ் மரியாதை

வெள்ளிக்கிழமை, 13 செப்டம்பர் 2019      தமிழகம்
OPS-EPS 2018 10 29

தந்தை பெரியாரின் 141-வது பிறந்த நாள் விழாவையொட்டி வரும் 17-ம் தேதி சென்னையில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்துகின்றனர்.

 
இது குறித்து அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 141-வது பிறந்த நாளான 17-ம் தேதி காலை 10.30 மணியளவில், சென்னை அண்ணா மேம்பாலம் அருகே அமைந்துள்ள தந்தை பெரியாரின்  திருஉருவச் சிலைக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர்களும் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர். 

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர்களும்,எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அனைத்து நிலைகளிலும் செயல்பட்டு வரும் அ.தி.மு.க. நிர்வாகிகளும், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட அ.தி.மு.க.வின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து