அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

புதன்கிழமை, 18 செப்டம்பர் 2019      தமிழகம்
cm edapadi 2019 08 12

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக வரும் 20-ம் தேதி முதல் தண்ணீர் திறந்து விட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து அமராவதி பழைய மற்றும் புதிய பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடுமாறு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களைச் சார்ந்த நீரினைப் பயன்படுத்துவோர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி  மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களைச் சார்ந்த  நீரினைப் பயன்படுத்துவோர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி  மக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த 8 பழைய வாய்க்கால் பாசனப் பகுதிகளுக்கு குறுவை சாகுபடிக்காக 20.9.2019 முதல் 18.1.2020 வரை 1944.00 மி.கன.அடிக்கு  மிகாமலும், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 10 பழைய இராஜவாய்க்கால் பாசனப் பகுதிகளுக்கு, 20.9.2019 முதல் 4.12.2019 வரை 3110 மி.க.அடிக்கு  மிகாமலும் மற்றும்  திருப்பூர் மாவட்டத்திலுள்ள  அமராவதி பிரதானக் கால்வாய் மூலம் பாசனம் பெறும் புதிய பாசனப் பகுதிகளுக்கு 20.9.2019 முதல்  4.12.2019  வரை 1711 மி.க அடிக்கு மிகாமலும் ஆக மொத்தம் 6765.00 மி.கனஅடிக்கு மிகாமல் அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை

Aval Ladoo Recipes in Tamil | அவல் லட்டு | Sweets Recipe in Tamil

Star Hotel Chicken Shami Kabab Recipe in Tamil | சிக்கன் ஷாமி கபாப் | Chicken Recipes

Star Hotel Coriander Chicken Recipe in Tamil| | கொத்தமல்லி சிக்கன்| Kothamalli Chicken | Chicken Recipe

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Madurai Special Kari Dosa Recipe in Tamil | மதுரை மட்டன் கறி தோசை | Mutton Kari Dosa | Keema Dosa

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து