முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் கால் இறுதியில் அமித் பங்கால்

புதன்கிழமை, 18 செப்டம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

கேத்தரின்பர்க் : ஆடவருக்கான உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் அமித் பங்கால் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

ரஷ்யாவின் கேத்தரின்பர்க் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் 52 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் அமித் பங் கால் தனது 3-வது சுற்றில் துருக்கியின் பதுஹான் சிட்சியை எதிர்த்து விளையாடினார். இதில் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய அமித் பங்கால் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

கால் இறுதி சுற்றில் அமித் பங்கால், பிலிப்பைன்ஸின் கார் லோவை எதிர்கொள்கிறார். கார்லோ 3-வது சுற்றில் கொரியா வின் ஜோ சேஹியோங்கை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தினார். கடந்த ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியின் அரை இறுதியில் கார்லோவை, அமித்பங்கால் வீழ்த்தியிருந்தார். இதனால் கூடுதல் நம்பிக்கையுடன் அமித் பங்கால் கால் இறுதி சுற்றை சந்திக்க உள்ளார்.

63 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் மணீஷ் கவுசிக் 5-0 என்ற கணக்கில் மங்கோலியாவின் சின்ஸோரிக்கை வீழ்த்தி கால் இறுதியில் கால்பதித்தார். கால் இறுதி சுற்றில் மணீஷ் கவுசிக், பிரேசிலின் வாண்டெர்சன் டி ஆலி வேராவை எதிர்கொள்கிறார். ஆலி வேரா தனது 3-வது சுற்றில் 3-2 என்ற கணக்கில் ஜப்பானின் டெய்சுக் நரிமட்சுவை தோற்கடித்தார். 91 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சஞ்ஜீத், 2-ம் நிலை வீரரான உஸ்பெகிஸ்தானின் சஞ்சர் துர்சுனோவை எதிர்த்து விளையாடினார். இதில் சஞ்ஜீத் 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றில் நுழைந்தார். கால் இறுதியில் 7-ம் நிலை வீரரான ஈக்வேடாரின் ஜூலியோ சீசா காஸ்டிலோ டோரஸுடன் மோதுகிறார் சஞ்ஜீத்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து