நாங்குநேரி - விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பி விருப்பமனு அளித்த அ.தி.மு.க.வினரிடம் ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். நேர்காணல்

திங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2019      தமிழகம்
OPS-EPS interview option petition 2019 09 23

சென்னை : நாங்குநேரி - விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட இரண்டாவது நாளாக விருப்பமனுக்கள் பெறப்பட்டன.

அ.தி.மு.க அலுவலகத்தில் நாங்குநேரி - விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி மாநில இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்று இரண்டாவது நாளாக விருப்பமனுக்கள் பெறப்பட்டன. இதைத்தொடர்ந்து வில்லன் நடிகர் ஜஸ்டினின் மகள் பபிதா அ.தி.மு.க அலுவலகத்திற்கு வந்தார். ரூ.25 ஆயிரம் வழங்கி அ.தி.மு.க வேட்பாளர் விருப்பமனு பூர்த்தி செய்து அக்கட்சி அலுவலக மேலாளர்கள் மகாலிங்கம் மற்றும் மனோகரனிடம் விண்ணப்பங்களை வழங்கினார்.

இதன் பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த பபிதா, நடிகர் ஜஸ்டீன் எம்.ஜி.ஆரோடு திரைப்படங்களில் நடித்தது மட்டுமில்லாமல், கட்சி நிகழ்ச்சியில் அவருக்கு பாதுகாப்பு கொடுத்தவர். அவருடைய மகள் என்ற பெருமையுடன் நான் நாங்குநேரியில் எனக்கு போட்டியிட வாய்ப்பு கேட்கிறேன். முதல்வரும், துணைமுதல்வரும் எனக்கு அந்த வாய்ப்பை உறுதியாக தருவார்கள் என்று நம்புகிறேன். நாங்குநேரியில் போட்டியிட நான் விருப்பம் தெரிவித்ததன் காரணம் அங்கு பெரும்பான்மையான வாழும் நாடார் சமூகத்தை சேர்ந்தவள் என்பது தான் என்றார் அவர்.

இத்தொகுதியில் போட்டியிடுவதற்காக முன்னாள் எம்.எல்.ஏ., தாமரைக்கனியின் மகன் இன்பதமிழன், முன்னாள் எம்.பிக்கள் நாராயணன் பாளை முன்னாள் எம்.எல்.ஏ., தர்மலிங்கம் கேபிரியல் ஜெபராஜன், ராதாபுரத்தை சேர்ந்த கருப்புசாமி, குமரேசன்,யோசுவா, ரெட்டியார்ப்பட்டி நாராயணன் ஆகியோர் விண்ணப்பங்களை வழங்கியுள்ளனர்.
விக்கிரவாண்டி தொகுதியில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் சகோதரர் ராதாகிருஷ்ணன் சார்பில் விருப்பமனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் எம்.பி.லட்சுமணன் முன்னாள் கவுன்சிலர் பிரேமா. வி.எம்.குமார், ஆறுமுகம் ஆகியோரும் விருப்பமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். புதுச்சேரி மாநிலம் காமராஜ் நகரில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட அம்மாநில அ.தி.மு.க துணைசெயலாளர் கணேசன் தனது விருப்பமனுவை தாக்கல் செய்துள்ளார். மூன்று தொகுதிகளிலும் மொத்தம் 100க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க வேட்பாளர்களாக போட்டியிட விருப்பமனுக்களை வழங்கியுள்ளனர். இந்த விருப்பமனுக்களை அ.தி.மு.க மகளிர் அணி மாநில செயலாளரும் முன்னாள் எம்.பியுமான விஜிலா சத்யானந்த், அ.தி.மு.க அலுவலக மேலாளர் மகாலிங்கம்துணை மேலாளர் மனோகரன் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.
இது குறித்து அதிமுக தலைமை கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-

விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி மாநிலம் - காமராஜ் நகர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதிமுக ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்களான, கட்சி ஒருங்கிணைப்பாளரும், துணைமுதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க அவைத் தலைவர் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர் . ஆர். வைத்திலிங்கம், எம்.பி அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் தமிழ்மகன் உசேன், இலக்கிய அணிச் செயலாளரும், செய்தித் தொடர்பாளரும், தமிழ் நாடு பாடநூல் நிறுவனத் தலைவருமான பா.வளர்மதி, கழக மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் வேணுகோபால் ஆகியோர், தலைமைக் கழகத்தில் நேற்று மாலை அனைத்திந்திய அதிமுக வேட்பாளர்களாகப் போட்டியிட அனுமதி கோரி விருப்ப மனு அளித்துள்ள கழக உடன்பிறப்புகளிடம் நேர்காணல் நடத்தினர். இதில், விருப்ப மனு அளித்துள்ள அ.தி.மு.கவினர் கலந்துகொண்டு தங்களுடைய கருத்துகளை தெரிவித்தனர்.

மதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை

Aval Ladoo Recipes in Tamil | அவல் லட்டு | Sweets Recipe in Tamil

Star Hotel Chicken Shami Kabab Recipe in Tamil | சிக்கன் ஷாமி கபாப் | Chicken Recipes

Star Hotel Coriander Chicken Recipe in Tamil| | கொத்தமல்லி சிக்கன்| Kothamalli Chicken | Chicken Recipe

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Madurai Special Kari Dosa Recipe in Tamil | மதுரை மட்டன் கறி தோசை | Mutton Kari Dosa | Keema Dosa

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து