ரிஷப் பந்தை 5 அல்லது 6-வது இடத்தில் களமிறக்கப்பட வேண்டும்: வி.வி.எஸ் லக்‌ஷ்மண்

திங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2019      விளையாட்டு
Rishabh pant VVS Laxman 2019 09 23

மும்பை  : ரிஷப் பந்தை 5  அல்லது 6-வது இடத்தில் களமிறக்கப்பட வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ் லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார்.

இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருக்கும் ரிஷப் பந்த்-ஐ நீண்ட கால விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக உருவாக்க இந்திய அணி நிர்வாகம் விரும்புகிறது. இதனால் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறன் படைத்துள்ள ரிஷப் பந்தால், சர்வதேச ஆடடத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. பெங்களூர் அணிக்கெதிரான ஆட்டத்தில் 4-வது வீரராக களம் இறங்கிய அவர், 20 பந்தில் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.இந்நிலையில், அவரால் 4-வது இடத்தில் வெற்றி பெற முடியவில்லை என்று முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வி.வி.எஸ்.லக்‌ஷ்மண் கூறுகையில், ரிஷப் பந்தின் வழக்கமான பேட்டிங் ஸ்டைலே, அதிரடி ஷாட்டுகள் தான். ஐ.பி.எல். தொடரில் 4-வது இடத்தில் களம் இறங்கி பேட்டிங் செய்யும்போது, அந்த ஷாட்டுகள் அவருக்கு கைக்கொடுத்தன. சராசரி 45 ஆக இருந்தது. ஆனால், துரதிருஷ்டவசமாக சர்வதேச கிரிக்கெட்டில் 4-வது இடத்தில் அவரால் வெற்றி பெற முடியவில்லை. ஒவ்வொரு வீரர்களும் தங்களுடைய வழக்கமான ஆட்டத்திறனுடன் செல்வார்கள். ஆனால், உடனடியாக அவர்களால் உள்ளூர் போட்டிகளில் கிடைத்த வெற்றியை பெற இயலாது. ரிஷப் பந்த் புதிதாக முயற்சி செய்து கொண்டு, ஸ்டிரைக் மாறுதல் போன்றவற்றை செய்கிறார். ஆனால், அவரது ஷாட் செலக்சன் சிறப்பானதாக இல்லை. ரிஷப் பந்தை 5-வது அல்லது 6-வது இடத்தில் களமிறக்கப்பட வேண்டும். 4-வது இடத்தில் களம் இறங்கி ரன்கள் குவிக்கும் சரியாக வழி அவருக்கு தெரியவில்லை. ஹர்திப் பாண்டியா அல்லது ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோரில் ஒருவரை நான்காவது இடத்தில் களம் இறக்கலாம். அவர்களுக்கு போதுமான அளவு அனுபவம் உள்ளது. இதனால் அவர்கள் அந்த இடத்தில் சிறப்பாக விளையாட முடியும்  என்றார்

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து