வீரர்கள் அறையில் இளைஞர்களுக்கு உத்வேகமாக திகழ்கிறார் கோலி: ஹனுமா விஹாரி

திங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2019      விளையாட்டு
Kohli-Hanuman vihari 2019 09 23

புதுடெல்லி : இந்திய அணி கேப்டன் விராட் கோலி, வீரர்கள் அறையில் இளைஞர்களுக்கு உத்வேகமாக திகழ்கிறார் என ஹனுமா விஹாரி தெரிவித்துள்ளார்.

இந்திய டெஸ்ட் அணியின் இளம் பேட்ஸ்மேன் ஹனுமா விஹாரி. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பாக விளையாடி தனது இடத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டார். வீரர்கள் அறையில் கேப்டன் விராட் கோலி எப்போதுமே இளைஞர்களுக்கு உத்வேகமாக இருப்பார் என்று ஹனுமா விஹாரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஹனுமா விஹாரி கூறுகையில், விளையாட்டு மைதானத்திலும் சரி, வெளியிலும் சரி, விராட் கோலி எப்போதுமே உதாரணமாக இருப்பார். வீரர்கள் அறையில் இளம் வீரர்களுக்கு உத்வேகமாக இருப்பார். அவரை நாம் முன்மாதிரியாகவும், பின் தொடரக் கூடிய நபராகவும் நாம் பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து