காபூல் : ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் குளூஸ்னர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர் பில் சிம்மன்ஸ். அவரது பதவிக் காலம் முடிவடைந்ததையொட்டி, புதிய பயிற்சியாளர் பதவிக்கு விரும்புவோம் விண்ணப்பிக்கலாம் என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. 50-க்கும் மேற்பட்டோர் விருப்பம் தெரிவித்திருந்தனர்.
அதில் தென்ஆப்பிரிக்கா அணியின் தலைசிறந்த ஆல்-ரவுண்டராக விளங்கிய குளூஸ்னரை தேர்வு செய்து தலைமை பயிற்சியாளராக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டு நியமித்துள்ளது.