எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தங்கம் விலை நேற்று காலை கிராமுக்கு 300 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,700-க்கும் சவரனுக்கு 2400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.93,600-க்கும் விற்பனையான நிலையில், நேற்று மாலை விலை மேலும் குறைந்து சவரனுக்கு ரூ.1280 குறைந்து ரூ.92 ஆயிரத்து 320-க்கு விற்பனையானது. இதனால் நேற்று ஒரேநாளில் மொத்தமாக சவரனுக்கு ரூ.3680 குறைந்து விற்பனையானது நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 8-ம் தேதி ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்தை தாண்டிய நிலையில், கடந்த 17-ம் தேதி ஒரு சவரன் ரூ.97 ஆயிரம் என்ற உச்சத்தையும் கடந்தது. மேலும் விலை உயருமோ? என நினைத்த நேரத்தில், அதற்கு மறுநாளே சவரனுக்கு ரூ.1,600 சரிந்து காணப்பட்டது. தொடர்ச்சியாக கடந்த 3 நாட்களுக்கு முன் சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.95,360-க்கும் தங்கம் விற்பனையானது.
இந்த விலை குறைவு தீபாவளி விற்பனைக்காக என சொல்லப்பட்ட நிலையில், அதற்கேற்றாற்போல், தீபாவளி பண்டிகை முடிந்த மறுநாளே தங்கம் விலை மீண்டும் எகிறியது. கடந்த சில நாட்களாகவே ஒரே நாளில் ஏற்ற-இறக்கத்தை தங்கம் விலை சந்தித்து வருகிறது. அந்த வகையில் நேற்று காலை தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. கிராமுக்கு 300 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,700-க்கும் சவரனுக்கு 2400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.93,600-க்கும் விற்பனையானது.
இந்நிலையில் தங்கம் விலை மேலும் குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.160 குறைந்து ரூ.11 ஆயிரத்து 540 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு ரூ.1280 குறைந்து ரூ.92 ஆயிரத்து 320-க்கு விற்பனையானது. இதனால் நேற்று மொத்தமாக சவரனுக்கு ரூ.3680 குறைந்து விற்பனையானது. இது நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 175 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி 1 லட்சத்துக்கு 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


