Idhayam Matrimony

அடையாறு ஆற்றின் முகதுவாரத்தினை அகலப்படுத்தும் பணி மேலும் தீவிரம்

சனிக்கிழமை, 25 அக்டோபர் 2025      தமிழகம்
Adaiyar-Rive

Source: provided

சென்னை: அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தினை அமல்படுத்தும் பணியை விரைவில் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் அந்த பணிகள்  மேலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. அதேவேளை, வங்கக்கடலில் நாளை மோன்தா என்ற புயல் உருவாக உள்ளது. இதனால், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, சென்னை சீனிவாசபுரம் அருகே அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது, முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணியை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில், அடையாறு ஆற்றின் முகதுவாரத்தினை அகலப்படுத்தும் பணி நேற்று தீவிரமாக நடைபெற்று வருகிறது. 12 பொக்லைன் இயந்திரங்கள், 4 ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக கொசஸ்தலையாறு வடிநில கோட்டம் செயற்பொறியாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், அடையாறு ஆற்றின் முக துவாரத்தில் உள்ள மண் படுகைகளை வடகிழக்கு பருவ மழை துவங்கும் முன்பு முதல்-அமைச்சர் வழிகாட்டுதலின்படி நீர்வளத்துறையினரால் செப்டம்பர் 2025 முதல் அக்டோபர் மாதம் வரை தூர்வாரி அகலப்படுத்தப்பட்டு வருகிறது. முகதுவாரம் மண் படுகையினால் மூடப்படும் நிகழ்வானது கடல் அலைகளினால் தொடர்ந்து நடைபெறும் நிகழ்வாகும்.

இந்நிலையில் வடகிழக்கு பருவ மழை தீவிரமானதால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 24.10.2025 அன்று அடையாறு முக துவாரத்திற்கு திடீராய்வு மேற்கொண்டு நீர்வளத்துறையினரால் 3 பொக்லைன் கொண்டு தூர்வாரப்படும் அடையாறு ஆற்றின் முகதுவாரத்தை அகலப்படுத்தும் பணியினை கூடுதல் இயந்திரங்களை பயன்படுத்தி போர்க்கால அடிப்படையில் மண் திட்டுக்களை அகற்றி அடையாறு வெள்ளநீர் விரைவாக வடிய ஆணையிட்டார். இதனைத் தொடர்ந்து 24.10.2025 அன்று மாலையில் இருந்து படிப்படியாக இயந்திரங்கள் எண்ணிக்கையினை உயர்த்தப்பட்டு தற்போது 12 பொக்லைன் இயந்திரங்களும் 4 ஜேசிபி (JCB) இயந்திரங்களுண்டு போர்க்கால அடிப்படையில் நீர்வளத்துறையினரால் அடையாறு ஆற்றின் முக துவாரத்தின் மண் திட்டுகளை அகற்றி அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து