Idhayam Matrimony

மலைப்பாதையில் பாறை சரிவு: திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 19 அக்டோபர் 2025      ஆன்மிகம்
Tirupati-2023-05-01

திருப்பதி, தொடர் விடுமுறையை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய திருப்பதி கோவிலுக்கு அதிக அளவில் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் திருப்பதி மலைப்பாதையில் பாறை சரிவு ஏற்பட்டதை அடுத்து பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆந்திர பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் தேங்கி காணப்படுகிறது. நெல்லூர், சித்தூர், விஜயநகரம், குண்டூர், பிரகாசம் மற்றும் திருப்பதி உள்ளிட்ட இடங்களில் நேற்று இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாளை (21-ந்தேதி) முதல் பருவநிலை தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக திருப்பதியில் தொடர் மழை பெய்து வருகிறது.

இதனால், திருப்பதி மலைப்பாதையில் பாறைகள் சரிந்து உள்ளன. இதனை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லக்கூடிய பக்தர்கள் எச்சரிக்கையுடன் பயணிக்கும்படி திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. வார இறுதி நாட்கள் மற்றும் தீபாவளி பண்டிகை உள்ளிட்டவற்றை முன்னிட்டு தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதனால், பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய திருப்பதி கோவிலுக்கு அதிக அளவில் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் திருப்பதி செல்லும் மலைப்பாதையில் பாறைகள் சரிந்து உள்ளன. அதனால், பக்தர்கள் கவனத்துடன் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து