எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சிட்னி: சர்வதேச வெள்ளைப்பந்து (ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள்) கிரிக்கெட்டில் விராட் கோலி இதுவரை 18,443 ரன்கள் குவித்தன் மூலம் வெள்ளைப்பந்து போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார்.
எளிதில் வெற்றி...
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி ஆட்டம் சிட்னியில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி எளிதில் வெற்றிப்பெற்றது. முன்னதாக இந்திய அணிக்கு ரோகித் சர்மா - விராட் கோலி ஜோடி சிறப்பாக ஆடி வெற்றியை பெற்று கொடுத்தது. வெறும் 38.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் அடித்த இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 121 ரன்களுடனும், விராட் கோலி 74 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
18,443 ரன்கள் குவிப்பு...
இந்த ஆட்டத்தில் அடித்த 74 ரன்களையும் சேர்த்து சர்வதேச வெள்ளைப்பந்து (ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள்) கிரிக்கெட்டில் விராட் கோலி இதுவரை 18,443 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் வெள்ளைப்பந்து போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரர் என்ற உலக சாதனையை இவர் படைத்துள்ளார். இதற்கு முன்னர் சச்சின் 18,436 ரன்கள் அடித்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது அதனை முறியடித்துள்ள விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார்.
2-வது இடத்திற்கு...
மேலும், இந்த போட்டியில் அரைசதம் அடித்ததால் விராட் கோலி புதிய சாதனையை படைத்துள்ளார். அதன்படி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி 2வது இடத்திற்கு முன்னேறினார் . குமார் சங்கக்காராவை (14,234) முந்தி 14,240 ரன்களுடன் விராட் கோலி 2வது இடத்திற்கு முன்னேறினார் . இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் 18,426 ரன்களுடன் சச்சின் தெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார்.
வெள்ளைப்பந்து போட்டியில் அதிக ரன்கள்:
1. கோலி - 18,443 ரன்கள்.
2. சச்சின் - 18,436 ரன்கள்.
3. சங்கக்கரா - 15,616 ரன்கள்.
4. ரோகித் சர்மா - 15,589 ரன்கள்.
5. ஜெயவர்த்தனே - 14,143 ரன்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


