முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்செந்தூர் கோவில் கந்தசஷ்டி திருவிழா: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டி.ஐ.ஜி., எஸ்.பி. நேரில ஆய்வு

சனிக்கிழமை, 25 அக்டோபர் 2025      தமிழகம்
Tiruchendur 2024-04-13

Source: provided

திருச்செந்தூர்: ருச்செந்தூர் கோவில் கந்தசஷ்டி திருவிழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடு பணிகளை டி.ஐ.ஜி., எஸ்.பி. ஆய்வு செய்தார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 22.10.2025 அன்று யாகசாலை பூஜையுடன் தொடங்கி 27.10.2025 அன்று சூரசம்ஹார நிகழ்வு மற்றும் 28.10.2025 அன்று திருக்கல்யாண நிகழ்வுடன் முடிவடைகிறது.

கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. (பொறுப்பு) சந்தோஷ் ஹாதிமணி மற்றும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ஆகியோர் நேற்று முன்தினம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகம், சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரை பகுதி, கோவில் சுற்றுவட்டார பகுதி மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் உள்ள சாலைகள் மற்றும் வாகனம் நிறுத்தும் இடங்கள் ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர். 

அப்போது அவர்கள், போக்குவரத்து மாற்றங்கள் உள்ள சாலைகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்களில் அதுகுறித்த அறிவிப்பு பலகைகள் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பயன்படும் வகையில் அனைத்து இடங்களிலும் வைக்க வேண்டும் எனவும், காவல்துறை அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர். இந்த நிகழ்வின்போது திருச்செந்தூர் உட்கோட்ட டி.எஸ்.பி. மகேஷ்குமார் உட்பட காவல்துறையினர் மற்றும் திருச்செந்தூர் கோவில் இணை ஆணையர் ராமு ஆகியோர் உடனிருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து