இன்செயோன் : கொரியா ஓபன் பேட்மிண்டனில் நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் ஜப்பான் வீரர் கென்டோ மோமோட்டோவிடம் இந்திய வீரர் காஷ்யப் தோல்வியடைந்து வெளியேறினார்.
கொரியாவில் உள்ள இன்செயோனில் கொரியா ஓபன் பேட்மிண்டன் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்திய வீரர் காஷ்யப் பாருபல்லி, 2 முறை உலக சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான ஜப்பானின் கென்டோ மோமோட்டாவை எதிர்கொண்டார். காஷ்யப் முதல் செட்டை 13-21 என இழந்தார். இரண்டாவது செட்டிலும் ஜப்பான் வீரரின் ஆதிக்கம் தொடர்ந்தது. இதையடுத்து, 15 -21 என்ற கணக்கில் காஷ்யப் தோல்வியடைந்து வெளியேறினார்.