முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொருளாதார மந்த நிலையை சினிமா பட வசூலுடன் ஒப்பிட்டு கருத்து வாபஸ் பெற்றார் மத்திய அமைச்சர்

ஞாயிற்றுக்கிழமை, 13 அக்டோபர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : நாட்டின் பொருளாதாரம் வலுவாக இருப்பதை 3 திரைப்படங்களின் ஒரு நாள் வருமானம் உறுதிப்படுத்தியிருப்பதாக தான் கூறியதை திரும்ப பெறுவதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மகராஷ்டிர தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பொருளாதார சரிவு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தேசிய விடுமுறைதினமான அக்டோபர் 2-ம் தேதி, வார், சைரா, ஜோக்கர் ஆகிய 3 திரைப்படங்கள் இந்தியில் வெளியாகின. இந்த 3 திரைப்படங்களும் ஒரே நாளில் 120 கோடிரூபாய் வசூல் செய்துள்ளது என்று திரைவிமர்சகர் கோமல் மேத்தா கூறியிருந்தார். 3 திரைப்படங்கள் ஒரே நாளில் 120 கோடி ரூபாய் வசூல் வசூலாகியிருப்பதாக திரைப்பட வர்த்தக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதாகவும் இது நாட்டின் பொருளாதாரம் வலுவாக இருப்பதற்கு சான்று என்றும் தெரிவித்தார். இந்த பதில் சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மும்பையில்  3 திரைப்படங்கள் ஒரே நாளில் 120 கோடி ரூபாய் வசூல் செய்தது செய்தி தரவுகளின் அடிப்படையில் உண்மையானவை. லட்சகணக்கானோருக்கு வேலைவாய்ப்பை அளித்து வரும், வரிகளின் மூலம் நாட்டிற்கு பங்களிப்புகளை அளித்து வரும் நமது திரைத்துறை மீது மிகவும் பெருமிதம் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார். பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதையும் சுட்டிக்காட்டியிருந்தேன். பிரதமர் மோடி அரசு, சாதாரண மக்களின் உணர்வுகளின் மீது எப்போதும் அக்கறை கொண்டுள்ளது. அதே நேரத்தில் வேறு விதமாக விமர்சனங்கள் எழுவதால் தமது கருத்தை திரும்ப பெறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து