Idhayam Matrimony

மின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் உயிரிழந்த 13 பேர் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிதி - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சனிக்கிழமை, 19 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : மின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் உதவித்தொகை வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் எடப்பாடிபழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

நாகப்பட்டினம் மாவட்டம், குத்தாலம் வட்டம், பெருஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த பழனின் மகன் கணேஷ் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு வட்டம், சக்கிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சிவநாயகி கணவர் பெரியகருப்பன் மின்மாற்றியில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை வட்டம், தியாகி அண்ணாமலை நகரைச் சேர்ந்த வேடியப்பன் மகன் ரகுநாத் மின் கம்பம் அருகில் விளையாடிக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பூதநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மூக்கனின் மகன். பழனி மின்கம்பத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், முத்துக்கொண்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்த  ஏழுமலையின் மகன் பானி மின் கம்பத்தில் பழுது நீக்கும் பணியின் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், மாராடி கிராமத்தைச் சேர்ந்த பிச்சை மகன் குமார் என்பவர் மின்மாற்றியில் பழுது நீக்கும் பணியின் போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டம், மாங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த நாச்சியப்பனின் மகன் தமிழரசன் மின்மாற்றியில் பழுது நீக்கும் பணியின் போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், சின்னட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த திம்மையனின் மகன் வெங்கடாசலபதி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், தமிழ்த்தாய் கோவில் சாலையைச் சேர்ந்த அழகப்பனின் மனைவி காந்திமதி அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், இஞ்சிக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த சிங்காரவேலுவின் மகன் மோகன் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மேற்கு வட்டம், அணைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெரியகருப்பனின் மகன் . பாண்டித்துரை எதிர்பாராத விதமாக அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,

திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டத்தைச் சேர்ந்த சீனிவாசனின் மகன் ராஜமாணிக்கம் கம்பிவேலியில் மின்கசிவு ஏற்பட்டு, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், திருப்பாச்சேத்தி கிராமத்தைச் சேர்ந்த உதயகுமாரின் மகன் கவின்ராஜா விவசாய நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது, பாம்பு கடித்து உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். மேற்கண்ட துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 13 நபர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 13 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து