முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மராட்டியம் -அரியானாவில் இன்று சட்டசபை தேர்தல்

ஞாயிற்றுக்கிழமை, 20 அக்டோபர் 2019      இந்தியா
Image Unavailable

மும்பை : சட்டசபை தேர்தல் நடைபெறும் மராட்டியம்- அரியானாவில் இன்று ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளதால் 75 ஆயிரம் போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

மராட்டியம், அரியானா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் விரைவில் சட்டசபை பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து மராட்டியம், அரியானா ஆகிய மாநிலங்களில் மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இரு மாநிலங்களிலும் இன்று ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இத்துடன் மாநிலங்களில் காலியாக உள்ள 64 சட்டசபை தொகுதிகளிலும் தேர்தல் நடக்கிறது. அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 11 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. சட்டசபை தேர்தல் நடைபெறும் மராட்டியம் - அரியானா இரு மாநிலங்களிலுமே தற்போது பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. இரு மாநிலங்களிலும் முக்கிய எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ளது. எனவே, இந்த இரு கட்சிகளும் ஆட்சியை பிடிப்பதற்கு போராடி வருகின்றன.மராட்டியத்தில் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 288. ஆளும் கட்சியான பாரதீய ஜனதா- சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. எதிர்க்கட்சி வரிசையில் காங்கிரசும், சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசும் கூட்டணி அமைத்துள்ளன. பாரதீய ஜனதா 152 தொகுதிகளிலும், சிவசேனா 124 தொகுதிகளிலும், கூட்டணி கட்சிகள் 12 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் கட்சி 145 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 123 தொகுதிகளிலும், கூட்டணி கட்சிகள் 20 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

பாரதீய ஜனதாவுக்காக பிரதமர் மோடி, அமித்ஷா, பட்னாவிஸ், ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் நிதின் கட்காரி, ஸ்மிருதிராணி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் என தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, அவரது மகன் ஆதித்ய தாக்கரே ஆகியோரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். மராட்டியத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 8 கோடியே 98 லட்சத்து 39 ஆயிரத்து 600 ஆகும். இன்று அனைத்து தொகுதிகளிலுமே ஒரே நேரத்தில் தேர்தல் நடக்கிறது. பல தொகுதிகள் பதட்ட மானவையாக அறிவிக்கப்பட்டு உள்ளன. எனவே அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அரியானா மாநிலத்தில் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 90. இங்கு பாரதீய ஜனதா, காங்கிரஸ், சவுதாலாவின் இந்திய தேசிய லோக்தளம் ஆகிய 3 கட்சிகள் தனித்தனியாக களத்தில் உள்ளன. இதுதவிர, பகுஜன் சமாஜ் கட்சியும் முக்கிய கட்சியாக போட்டியிடுகிறது. ஆனா லும், பாரதீய ஜனதா- காங்கிரஸ் இடையேதான் கடும் போட்டி நிலவி வருகிறது. தற்போது பாரதீய ஜனதா- காங்கிரஸ் இரு கட்சிகளுமே 90 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. இந்திய தேசிய லோக்தளம் 81 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 87 இடங்களிலும் போட்டியிடுகின்றன. மொத்தம் 1169 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். இந்த மாநிலத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 82 லட்சத்து 98 ஆயிரத்து 714. மொத்தம் 19 ஆயிரத்து 425 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 75 ஆயிரம் போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து