முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விக்கிரவாண்டியில் 84.36 சதவீதம் நாங்குநேரியில் 66.10 சதவீதம் வாக்குப்பதிவு - தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவிப்பு

திங்கட்கிழமை, 21 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : இடைத்தேர்தல் நடைபெற்ற நாங்குநேரியில் 66.10 சதவீதமும், விக்கிரவாண்டியில் 84.36 சதவீ மும் வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி  சத்யபிரதாசாகு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாங்குநேரி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த எச்.வசந்தகுமார், கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததால் அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. விக்கிரவாண்டியில் திமுக உறுப்பினர் ராதாமணி மறைவு காரணமாக அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இரு தொகுதிகளிலும்  நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே  விறுவிறுப்பாக நடைபெற்றது.

வாக்குப்பதிவு நேற்று மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. அதன் பின்னர் காத்திருந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இடைத்தேர்தல் வாக்குப்பதிவு குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரியில் மிக அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றது. விக்கிரவாண்டியில் 84.36 சதவீதமும், நாங்குநேரியில் 66.10 சதவீதமும் வாக்குகள்  பதிவாகியுள்ளன. கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலை ஒப்பிடும்போது 81.25 சதவீதம்  விக்கிரவாண்டியில் வாக்குபதிவு இருந்தது. இந்த முறை 84 சதவீதமாக  பதிவாகியுள்ளது. நாங்குநேரியில் 71.2 சதவீதம் இருந்தது. தற்போது 66.10 சதவீதம் வாக்குபதிவாகியுள்ளது. வாக்குபதிவு இயந்திரங்களில் அதிகளவு கோளாறு இல்லை. சில இடங்களில் வேலை  செய்யாத மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் உடனடியாக மாற்றம் செய்யப்பட்டு  புதியதாக அளிக்கப்பட்டது. மிக அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றுள்ளது.

வசந்தகுமார் எம்.பி மீது மக்கள் பிரதித்துவ சட்டம் மற்றும் இந்திய குற்றவியல் சட்டத்தின்படி  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் தேர்தல் கமிஷன் .சட்டம் ஒழுங்கை  சிறப்பாக கையாண்டது. சுதந்திரமாக வாக்களிக்க தேவையான அனைத்து  நடவடிக்கைகளையும் தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. இன்று பகல் 11 மணிக்கு  முழுமையான அளவில் வாக்குபதிவு சதவீதம் தெரியவரும். வாக்குப்பதிவுக்கு இடையே  மழை சில இடங்களில் பொழிந்தது. இதனால் பெரிய அளவில் பாதிப்பு எதுவும்  இல்லை. மற்றபடி அனைத்து இடங்களிலும் மிகவும் சுதந்திரமான, அமைதியான வாக்குபதிவு  நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை வரும் 24-ம் தேதி நடைபெறும்.தேர்தல் ஆணையத்தின்  வழிகாட்டுதலின்படி வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்  செய்யப்பட்டுள்ளது. இதே போல புதுச்சேரி மாநிலம் காமராஜ் நகரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 69.44 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளதாக புதுவை தேர்தல் கமிஷனர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து