முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் பட்டம் பெற்ற மாணவர்கள் அவர்கள் நாட்டுக்கே செல்ல வேண்டும்: அதிபர் ட்ரம்ப்

சனிக்கிழமை, 13 டிசம்பர் 2025      உலகம்
Trump 2023 03 05

வாஷிங்டன், அமெரிக்காவில் பட்டம் பெற்ற பிறகு இந்தியா, சீனா உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்கள் நாடு திரும்ப வேண்டியிருப்பது அவமானம் என அமெரிக்க அதிபர் கொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார்.

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “உலகின் சிறந்த மாணவர்களில் சிலருக்கு அமெரிக்கா கல்வி அளித்துவிட்டு, பட்டப்படிப்பை முடித்தவுடன் அவர்களைத் திருப்பி அனுப்புகிறது. நீங்கள் அமெரிக்காவில் உள்ள கல்லூரியில் பட்டம் பெறுகிறீர்கள், பிறகு நீங்கள் இந்தியாவுக்குத் திரும்ப வேண்டும், சீனாவுக்குத் திரும்ப வேண்டும், பிரான்ஸுக்குத் திரும்ப வேண்டும். அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ அங்கேயே திரும்ப வேண்டும். இங்கு தங்குவது மிகவும் கடினம். இது ஒரு அவமானம்.

அமெரிக்காவின் தலைசிறந்த கல்லூரிகளில் இருந்து வரும் நபர்களை நிறுவனங்களால் வேலைக்கு அமர்த்த முடிவதில்லை. விசா நிச்சயமற்ற தன்மை காரணமாக, உயர்தரப் பல்கலைக்கழகங்களில் இருந்து வரும் சிறந்த சர்வதேசப் பட்டதாரிகளைத் தக்கவைத்துக்கொள்ள அமெரிக்க நிறுவனங்கள் சிரமப்படுகின்றன.

நல்ல கல்வித் தகுதிகள் இருந்தபோதிலும், சிறப்பாகச் செயல்படும் பல பட்டதாரிகள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். வெளிநாட்டிலிருந்து வந்து படிக்கும் மாணவர்கள் சிலர் கல்லூரியில் முதலிடம் பெறுகிறார்கள், ஆனால் அவர்கள் நாட்டில் தங்குவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. மாணவர்கள் தங்கள் படிப்பை முடித்த பிறகு பெரும்பாலும் வெளியே தூக்கி எறியப்படுகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து