முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைன் துறைமுகங்கள் மீது ரஷ்யா தாக்குதல்-2 பேர் பலி

சனிக்கிழமை, 13 டிசம்பர் 2025      உலகம்
Ukrainian-port-2025-12-13

கீவ், உக்ரைன் துறைமுகங்கள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 2 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் , ரஷ்யா இடையே நேற்று 1 ஆயிரத்து 388வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளை, போரை முடிவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். அதன்படி, போர் நிறுத்தம் தொடர்பாக 28 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கையை டிரம்ப் முன்மொழிந்துள்ளார். இந்த நிபந்தனைகளில் சிலவற்றை ஏற்க உக்ரைன் மறுத்து வருகிறது. இதனால் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், உக்ரைனில் உள்ள துறைமுகங்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது. உக்ரைனின் ஒடிசா மாகாணத்தில் கருங்கடல் பகுதியில் அமைந்துள்ள குரோனொமொர்க், ஒடிசா ஆகிய 2 துறைமுகங்கள் மீது டிரோன்கள், ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல்கள் கடும் சேதமடைந்தன.

குறிப்பாக, குரோனொமொர்க் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துருக்கி நாட்டின் 3 கப்பல்கள் சேதமடைந்தன. இந்த கப்பல்கள் உணவு தானியங்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டு வந்தன என்று உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, துறைமுகங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 2 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து