முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமித்ஷாவுக்கு பிறந்தநாள் - பிரதமர் மோடி வாழ்த்து

செவ்வாய்க்கிழமை, 22 அக்டோபர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் 55-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்துக் குறிப்பில், அமித் ஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் ஓர் அனுபவம் மிக்க திறமைவாய்ந்த தலைவர். அமைச்சரவையில் எனது சகாவான அமித்ஷா, அரசாங்கத்தில் மிக முக்கியமான பங்கு வகிப்பதுடன் இந்தியாவை பாதுகாப்பதில் வலுவாக்குவதில் குறிப்பிடத்தக்க பங்காற்றி வருகிறார். அவருக்கு இறைவன் நீண்ட ஆயுளையும் ஆரோக்கியமான வாழ்க்கையையும் நல்கட்டும் என பிரதமர் மோடி அதில் பதிவிட்டுள்ளார். அமித்ஷா 1964-ம் ஆண்டு மும்பையில் பிறந்தார். அவர் இளமைக் காலத்திலேயே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். பா.ஜ.க.வில் படிப்படியாக வளர்ச்சி கண்டார். பின்னர் மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்த போது மாநில உள்துறை அமைச்சராக இருந்தார். சமகால அரசியலின் சாணக்கியர் என்றழைக்கப்படும் அமித்ஷா பா.ஜ.க.வின் தேர்தல் வெற்றிகளுக்கு பின்னால் நிற்கும் மிகப்பெரிய சக்தியாகவே பார்க்கப்படுகிறார். குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க.வின் வெற்றி சாத்தியமானதற்கு அமித்ஷாவின் வியூகங்களே காரணமாக பார்க்கப்படுகிறது. பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. ஆகியனவற்றால் 2019 மக்களவைத் தேர்தல் பா.ஜ.க.வுக்கு கைநழுவிப் போகும் என விமர்சிக்கப்பட்ட நிலையில் தேர்தல் வியூகங்களால் மீண்டும் பா.ஜ.க.வுக்கு வெற்றியை சாத்தியமாக்கி மோடியை 2-வது முறையாக பிரதமராக அமரவைத்திருக்கிறார் அமித்ஷா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து