உலக ராணுவ போட்டி: 100 மீ. ஓட்டத்தில் தங்கம் வென்றார் தமிழக வீரர் ஆனந்தன்

செவ்வாய்க்கிழமை, 22 அக்டோபர் 2019      விளையாட்டு
Anandan Indian player won gold 2019 10 22

வூஹான் : உலக ராணுவ போட்டிகள் 2019-ல் பங்கேற்ற மாற்றுத்திறனாளியான தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன் தங்கம் வென்றுள்ளார்.

சீனாவின் வூஹான் நகரில் 7-வது உலக ராணுவ போட்டிகள் நடைபெற்று வருகின்றன.  சீனாவில் நடைபெறும் மிக பெரிய விளையாட்டு போட்டியாக இது அமைந்து உள்ளது. ஏனெனில் 140 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரம் தடகள வீரர்கள் 27 வெவ்வேறு போட்டிகளில் பங்கேற்கின்றனர். இதில் மாற்றுத்திறனாளிகளுக்கான 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன் கலந்து கொண்டு தங்கம் வென்றுள்ளார். 

சீனாவில் நடைபெற்று வரும் போட்டியில் 12 நொடிகளில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றுள்ளார். பதக்கம் வெல்வது அவருக்கு புதியது அல்ல. கடந்த 2018-ம் ஆண்டு இந்தோனேசியாவின் ஜகார்தா நகரில் நடந்த ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு 400 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் வெள்ளி பதக்கமும், 200 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் வெண்கல பதக்கமும் வென்றுள்ளார்.

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து