முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்றம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா: காப்பு கட்டுதலுடன் தொடங்கியது

திங்கட்கிழமை, 28 அக்டோபர் 2019      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் நேற்று கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

தமிழ் கடவுள் முருகனின் ஆறு படைவீடுகளில் முதல் படைவீடு மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.கோயிலில் நேற்று காலை கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முதல் 6 நாட்கள் நடைபெறும் விழாவில் சுப்ரமணிய சுவாமி - தெய்வானையுடன் காலை - மாலை முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். முக்கிய நிகழ்வான வரும் நவம்பர் மாதம் 3-ம் தேதியன்று சூரசம்ஹாரம் நடைபெறும். திருவிழாவின் முதல் நாளான நேற்று 28-ம் தேதி (திங்கள்கிழமை) காலை 9.30 மணியளவில் கோயிலுக்குள் உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் எழுந்தருளும் சுப்பிரமணிய சாமிக்கும், சண்முகர் சன்னதியில் எழுந்தருளும் தெய்வானை மற்றும் வள்ளியுடன் சமேத சண்முகப் பெருமானுக்குமாக காப்புக்கட்டுதல் நடந்தது.இதனையடுத்து பக்தர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனாக ஒரு வேளைக்கு பால், மிளகு ,துளசி, ஆகியவை மட்டும் உண்டு கடும் விரதம் கடைபிடிக்க உள்ளனர். கடும் விரதமிருக்கும் பக்தர்கள் ஆறு நாட்களும் கோவிலிலேயே தங்கி இருந்து காலையிலும் மாலையிலுமாக இருவேளை சரவணப் பொய்கையில் நீராடி உடலில் ஈரத் துணியை கட்டியபடி கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். திருவிழாவையொட்டி கோயிலுக்குள் தினமும் ( 6 நாட்கள் ) காலையில் பதினொரு மணியளவிலும், மாலையில் ஐந்து மணியளவிலுமாக சண்முகார்ச்சனை நடைபெறும். இதே போல தினமும் இரவு 7 மணி அளவில் உற்சவர் சன்னதியிலிருந்து தெய்வானையுடன் முருகப்பெருமான் புறப்பட்டு திருவாட்சி மண்டபத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இதே போல் தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா நேற்று காப்புகட்டுதலுடன் தொடங்கியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து