வங்கதேசத்துக்கு எதிரான முதல் 20 ஓவர் கிரிக்கெட்: டெல்லியில் சாதனை படைக்க காத்திருக்கும் ரோகித் சர்மா

சனிக்கிழமை, 2 நவம்பர் 2019      விளையாட்டு
rohit sharma 2019 11 02

புது டெல்லி : வங்காளதேசத்துக்கு எதிரான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இதில் கோலியின் சாதனையை முறியடித்து ரோகித் சர்மா சாதனை படைக்கவுள்ளார்.

இந்திய மற்றும் வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா நேற்று முன்தினம் சக வீரர்களுடன் இணைந்து வலைபயிற்சியில் ஈடுபட்டார். அப்போது வலுவாக எறிந்த ஒரு பந்து ரோகித் சர்மாவின் இடது தொடையில் தாக்கி காயத்தை ஏற்படுத்தியது. இதனால் ரோகித் சர்மா பயிற்சியை பாதியில் கைவிட்டு வெளியேறி சிகிச்சை பெற்றார். அதன் பிறகு மீண்டும் பயிற்சிக்கு வரவில்லை. அவரது காயத்தன்மை குறித்து பரிசோதித்த இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவ குழு, அவர் உடல்தகுதியுடன் இருப்பதாகவும், முதலாவது ஆட்டத்தில் விளையாடுவதில் எந்த சிக்கலும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று நடைபெறும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா சாதனை படைக்க இருக்கிறார். அதாவது இந்திய கேப்டன் விராட் கோலி  20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். விராட் கோலி 67 போட்டிகளில் விளையாடி 2450 ரன்கள் எடுத்து முதலிடத்தில் இருக்கிறார். ரோகித் சர்மா 90 போட்டிகளில் விளையாடி 2443 ரன்களுடன் 2-வது இடத்தில் இருக்கிறார். இன்று நடக்கும் போட்டியில் ரோகித் சர்மா 8 ரன்கள் எடுத்தால், அவர் கோலியின் சாதனையை முறியடித்து அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து