எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மகராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து தேசியவாத காங்கிரஸ் ஆட்சியமைக்காது என சரத் பவார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மகராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. 105 இடங்களிலும் அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஆட்சியமைக்க இந்த கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ளது. ஆனால், தலா இரண்டரை ஆண்டுகளுக்கு சுழற்சி முறையில் முதல்வர் பதவி, அமைச்சரவையில் சரிபாதி பிரதிநிதித்துவம் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சிவசேனா பிடிவாதம் பிடித்து வருகிறது. இந்த கோரிக்கைகளை ஏற்க பா.ஜ.க. மறுப்பதால் புதிய அரசு பதவியேற்பதில் சிக்கல் நீடிக்கிறது.
இதனிடையே பா.ஜ.க.வின் ஆதரவு இல்லாமல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஆட்சியமைக்க சிவசேனா முயற்சி செய்வதாக தகவல் வெளியானது. மறுபுறம் சிவசேனாவின் ஆதரவு இல்லாமலேயே தேவேந்திர பட்நவிஸ் தலைமையில் சிறுபான்மை அரசாக பதவி ஏற்பதற்கான ஏற்பாடுகளை பா.ஜ.க. செய்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை டெல்லி சென்ற முதல்வர் தேவேந்திர பட்நவிஸ், பா.ஜ.க. தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
அப்போது, எக்காரணம் கொண்டு முதல்வர் பதவியையும், உள்துறை அமைச்சர் பதவியையும் சிவசேனாவுக்கு விட்டுக் கொடுப்பதில்லை என்று அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், இரு கட்சிகளுக்கு இடையே மோதல் வலுத்து வருவதோடு, புதிய ஆட்சி அமைவதிலும் இழுபறி நீடித்து வந்தது.
இந்நிலையில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், நேற்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்து பேசினார். பின்னர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது மகராஷ்டிராவில் சிவசேனாவுடன் சேர்த்து தேசியவாத காங்கிரஸ் ஆட்சி அமைக்காது. பெரும்பான்மை பெற்றுள்ள பா.ஜ.க.வும், சிவசேனாவும் இணைந்து விரைவில் அரசை அமைக்க வேண்டும். இதுதான் ஒரே வழி. எதிர்க்கட்சியாக நாங்கள் பங்கு வகிப்போம். ஜனாதிபதி ஆட்சியை தவிர்ப்பதற்கு இதைத் தவிர வேறு வழியில்லை. சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் என்னை சந்தித்தபோது, விரைவில் நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தல் குறித்து பேசினோம் என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025