முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வளைகுடா பகுதியில் அடையாளம் தெரியாத ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்

சனிக்கிழமை, 9 நவம்பர் 2019      உலகம்
Image Unavailable

டெக்ரான் : வளைகுடா பகுதியில் அடையாளம் தெரியாத ட்ரோனை ஈரான் சுட்டு வீழ்த்தியுள்ளது.

இது குறித்து தஸ்னிம் செய்தி நிறுவனம், வளைகுடாவில் ஈரானின் எல்லைக்குட்பட்ட பகுதியில் பந்தர் இ மஹ்ஷர் கடற்கரைப் பகுதிக்கு அருகே அடையாள தெரியாத ட்ரோன் ஒன்றை ஈரான் சுட்டு வீழ்த்தியுள்ளது. சுடப்பட்ட ட்ரோன் எந்த நாட்டைச் சேர்ந்தது என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை என்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவின் ட்ரோனை ஈரானை சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் மீண்டும் ட்ரோன் ஒன்றை ஈரான் சுட்டு வீழ்த்தியுள்ளது. சமீபத்தில் சவுதி எண்ணெய் ஆலை கப்பல் தாக்கப்பட்டதன் பின்னணியில் ஈரான்தான் உள்ளது என்று அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருவதால் அமெரிக்கா- ஈரானுக்கு இடையே மோதல் வலுத்துள்ளது.

அமெரிக்க அதிபராக  டிரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் அந்நாட்டுடனான அணு ஆயுத ஒப்பந்தம் பைத்தியக்காரத்தனமானது என்றும் கடுமையாக விமர்சித்தார். இதனைத் தொடர்ந்து ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது. ஆனால், அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த பிற நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தன. ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியவுடன் அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து