முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூலாந்துக்கு எதிரான கடைசி டி - 20 போட்டியில் மீண்டும் சூப்பர் ஓவரில் இங்கிலாந்து வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 10 நவம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

ஆக்லாந்து : ஆக்லாந்தில் நடைபெற்ற கடைசி டி - 20 போட்டி டையில் முடிவடைய சூப்பர் ஓவரில் நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து தொடரை கைப்பற்றியது.

நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி - 20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. நான்கு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் 2-2 என சமநிலையில் இருந்தன. ஐந்தாவது மற்றும் கடைசி டி - 20 கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் நேற்று நடைபெற்றது. மழை பெய்ததால் ஆட்டம் 11 ஓவராக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணியின் மார்ட்டின் கப்தில் கொலின் முன்ரோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மார்ட்டின் கப்தில் 20 பந்தில் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கொலின் முன்ரோ 21 பந்தில் 2 பவுண்டரி, 4 சிக்சருடன் 46 ரன்கள் குவித்தார். செய்பெர்ட் 19 பந்தில் ஒரு பவுண்டரி, ஐந்து சிக்சருடன் 39 ரன்கள் விளாச, நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 11 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் குவித்தது. பின்னர் 66 பந்தில் 147 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. தொடக்க வீரர் பாண்ட்டன் 7 ரன்னிலும், அடுத்து வந்த வின்ஸ் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதிரடியாக விளையாட விரும்பிய மோர்கன் 7 பந்தில் 17 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பேர்ஸ்டோவ் 18 பந்தில் 2 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 47 ரன்கள் சேர்த்தார். சாம் குர்ரான் 11 பந்தில் 24 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இங்கிலாந்தின் வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் 26 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை சவுத்தி இந்த ஓவரில் 10 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

இதனால் கடைசி ஓவரில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. 11-வது ஓவரை நீசம் வீசினார். முதல் இரண்டு பந்தில் மூன்று ரன்கள் எடுத்தனர். 3 - வது பந்தில் டாம் குர்ரான் ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து அணிக்கு கடைசி 3 பந்தில் 13 ரன்கள் தேவைப்பட்டது. ஜோர்டான் களம் இறங்கினார். 4 - வது பந்தை நீசிம் ஆப்-ஸ்டம்பிற்கு வெளியே புல் டாஸ் ஆக வீசினார். இதை சிக்சருக்கு தூக்கினார் ஜோர்டான். இதனால் இங்கிலாந்து அணிக்கு 2 பந்தில் ஏழு ரன்கள் தேவைப்பட்டது. இந்த போட்டி 50 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் போன்று ‘டை’ முடியுமோ என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஐந்தாவது பந்தில் இரண்டு ரன்கள் அடித்தார் ஜோர்டார். கடைசி பந்தில் பவுண்டரி அடித்தால் ‘டை’, சிக்ஸ் அடித்தால் வெற்றி என்ற நிலையில், கடைசி பந்தை பவுண்டரியாக அடித்தார் ஜோர்டார். இதனால் போட்டி ‘டை’யில் முடிந்தது. ஆட்டம் ‘டை’யில் முடிந்ததால் சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. பேர்ஸ்டோவ், மோர்கன் ஆகியோர் களம் இறங்கினர். பேர்ஸ்டோவ் 3 பந்தில் ஒரு சிக்சருடன் 8 ரன்களும், மோர்கன் 3 பந்தில் ஒரு சிக்சருடன் 9 ரன்களும் அடித்தனர். இதனால் இங்கிலாந்து 17 ரன்கள் அடித்தது. பின்னர் 18 ரன்கள் அடித்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் நியூசிலாந்து செய்பெர்ட், கப்தில் ஆகியோர் களம் இறங்கினர். நியூசிலாந்து அணியால் 8 ரன்களே அடிக்க முடிந்தது. இதனால் இங்கிலாந்து சூப்பர் ஓவரில் வெற்றி பெற்று டி - 20 தொடரை 3-2 எனக்கைப்பற்றியது. இந்த போட்டி 50 உலகக்கோப்பை தொடரை ஞாபகப்படுத்தியது. இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ‘டை’யில் முடிந்தது. பின்னர் சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரும் டை ஆனதால், பவுண்டரிகள் அதிகம் அடித்த அணிக்கு சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டது என்பது புறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து