எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்பிற்குள் தலைமை நீதிபதி அலுவலகம் வரும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது.
தகவல் அறியும் உரிமைச் சட்ட (ஆர்.டி.ஐ) வரம்பிற்குள் நாட்டின் தலைமை நீதிபதி அலுவலமும் வரும் என 2010ல் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்ற செயலாளர் மற்றும் தகவல் தொடர்பு அதிகாரி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இவ்வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. வழக்கின் விசாரணை முடிவடைந்ததையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஆர்.டி.ஐ சட்ட வரம்பு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், ஆர்.டி.ஐ சட்ட வரம்பில் தலைமை நீதிபதி அலுவலகமும் வரும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி உள்ளட்ட 3 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை வழங்கினர்.
தலைமை நீதிபதி அலுவலகமும் வெளிப்படைத் தன்மை கொண்டது என்பதற்காக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
2005ல் பிறப்பிக்கப்பட்ட சட்டத்தில், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஆர்.டி.ஐ வரம்பிற்குள் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |