வங்காளதேச அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி: மயங்க் அகர்வால் இரட்டை சதம்

வெள்ளிக்கிழமை, 15 நவம்பர் 2019      விளையாட்டு
SPORTS-1 2019 11 15

Source: provided

இந்தூர் : வங்காளதேச அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் மயங்க் அகர்வால் இரட்டை சதம் விளாசினார்.

இந்தூரில் நடக்கும் போட்டியில் 303 பந்துகளில் 25 பவுண்டரி, 5 சிக்சருடன் மயங்க் அகர்வால் இரட்டை சதம் அடித்துள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது 2-வது இரட்டை சதத்தை மயங்க் அகர்வால் பதிவு செய்தார். ஏற்கனவே தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மயங்க் அகர்வால் இரட்டை சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து