எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை : மறைமுகத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால் மேயர், நகராட்சித் தலைவர் பதவிகளுக்கு விண்ணப்பம் செய்தவர்கள் கட்டணத்தை திரும்பி பெறலாம் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
இது குறித்து அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-
தமிழ்நாடு அரசு, மாநகராட்சி மேயர், நகர மன்றத் தலைவர், பேரூராட்சி மன்றத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ள நிலையில் மாநகராட்சி மேயர், நகர மன்றத் தலைவர், பேரூராட்சி மன்றத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட வாய்ப்பு வேண்டி விருப்ப மனு அளித்துள்ளவர்கள் தாங்கள் சார்ந்த மாநகராட்சி வார்டு, நகர மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகிறவர்கள் 22-ம் தேதி வெள்ளிக் கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, சம்பந்தப்பட்ட மாவட்டத் தலைநகரங்களில், விருப்ப மனுக்களைப் பெறுவதற்காக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகளிடம், உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம். மாநகராட்சி மேயர், நகர மன்றத் தலைவர், பேரூராட்சி மன்றத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட வாய்ப்பு வேண்டி ஏற்கெனவே கட்டணம் செலுத்தி விருப்ப மனு அளித்துள்ளவர்கள் அ.தி.மு.க. பொதுக்குழு முடிந்தவுடன் தாங்கள் செலுத்திய விண்ணப்பக் கட்டணத் தொகைக்கான அசல் ரசீதுடன் வரும் 25-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை தலைமைக் கழகத்திற்கு நேரில் வந்து, அத்தொகையினை பெற்றுக் கொள்ளலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |