சர்க்கரை கார்டை அரிசி அட்டையாக மாற்ற காலக்கெடு நீட்டிப்பு: அமைச்சர்

செவ்வாய்க்கிழமை, 26 நவம்பர் 2019      தமிழகம்
rice card change 2019 11 26

சென்னை : பொது விநியோக திட்டத்தில் அரிசி கார்டில் இருந்து சீனி கார்டாக மாற்ற காலக்கெடு வரும் 29-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அமைச்சர் காமராஜ் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

பொது விநியோகத் திட்டத்தில் தற்பொழுது 10,19,491 குடும்ப அட்டைகள் சர்க்கரை குடும்ப அட்டைகளாக உள்ளன. இந்த குடும்ப அட்டைகளை வைத்திருப்பவர்களில், தங்கள் குடும்ப அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்ய விரும்பினால், அதற்கான விண்ணப்பங்களை தங்களுடைய குடும்ப அட்டையின் நகலினை இணைத்து, 26.11.2019 வரை www.tnpds.gov.in என்ற இணைய முகவரியிலும், சம்பந்தப்பட்ட  வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் உதவி ஆணையர்களிடமும் சமர்ப்பிக்கலாம்  எனத்  தெரிவிக்கப்பட்டிருந்தது.  இந்த கால அவகாசத்தை  நீட்டிப்பு  செய்ய வேண்டும் என வரப்பெற்ற குடும்ப அட்டைதாரர்களின் கோரிக்கையினை ஏற்று, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிவுறுத்தலின்படி மேலும்,   3  நாட்கள் அதாவது 29.11.2019 வரை கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது.  இதன் பிறகு கால அவகாசம் வழங்கப்படமாட்டாது.  எனவே சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்றம் செய்ய விரும்புவோர் தங்களின் விண்ணப்பங்களை அளிக்க இணைய முகவரி,  வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் உதவி ஆணையாளர் அலுவலகங்களிலும் மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகளிலும் விண்ணப்பங்களை நேரடியாக வழங்கலாம் எனவும் தெரிவித்து கொள்ளப்படுகிறது. இவ்வாறு உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர். காமராஜ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து