முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் நடந்த விபத்தில் இந்திய மாணவர்-மாணவி பலி

திங்கட்கிழமை, 2 டிசம்பர் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்காவில் கார் மீது லாரி மோதிய விபத்தில் இந்தியாவை சேர்ந்த மாணவர், மாணவி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவை சேர்ந்த மாணவர் வைபவ் கோபி செட்டி (26), மாணவி ஜுடி ஸ்டேன்லி (23). இவர்கள் 2 பேரும் அமெரிக்காவில் டென்னிசே பல்கலைக்கழகத்தில் விவசாய கல்லூரியில் படித்து வந்தனர். உணவு அறிவியல் சம்பந்தப்பட்ட பாடத்தின் பட்ட மேற்படிப்பு பயின்றனர்.

அமெரிக்காவில் ஆண்டு தோறும் நவம்பர் 28 - ந்தேதி நன்றி தெரிவிக்கும் விழா கோலாகலமாக நடைபெறும். சம்பவத்தன்று இரவு சவுத் நாஷ்வில்லே என்ற இடத்தில் நடந்த விழாவில் இவர்கள் 2 பேரும் கலந்து கொண்டனர். விழா முடிந்ததும் இவர்கள் 2 பேரும் விடுதிக்கு ஒரு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். நோலென்ஸ் வில்லே என்ற இடத்தில் இவர்கள் வந்த கார் மீது அந்த வழியாக சென்ற ஒரு லாரி பயங்கரமாக மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதனால் நிலை தடுமாறிய கார் தாறுமாறாக ஓடி ரோட்டின் தடுப்பு சுவரில் இடித்து மரத்தில் மோதியது. அதில் கார் அப்பளமாக நொறுங்கியது. அதன் இடிபாட்டில் சிக்கி வைபவ்கோபிசெட்டி, ஜூடிஸ்டேன்லி ஆகிய 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். இதற்கிடையே இவர்களது கார் மீது மோதிய லாரியின் உரிமையாளர் டேவிட் டோரெஸ் (26) போலீசில் சரண் அடைந்தார். விபத்தில் பலியான 2 பேரும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். எனவே, அவர்களின் உடல்களை இந்தியா அனுப்பவும், இறுதி சடங்கு நடத்த உதவும் வகையில் பல்கலைக்கழக மாணவர்கள் (ஆன்லைன்’ மூலம் சுமார் ரூ.30 லட்சம் (42 ஆயிரம் டாலர்) நிதி திரட்டி உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து