முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்தர் சுவாமிகள் மரணம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

வியாழக்கிழமை, 5 டிசம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தருமபுரம் ஆதீனம்ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்தர் சுவாமிகள் பரபூரண நிலையை அடைந்ததற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளா்.

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது,

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை, தருமபுரம் ஆதீனத்தின் 26-வது குருமணியாக அருளாட்சி புரிந்த  ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்தர் பரமாச்சாரிய சுவாமிகள் 4.12.2019 அன்று பரிபூரண நிலையை அடைந்தார்கள் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்தர் பரமாச்சாரிய சுவாமிகள் திருமறை பயிற்சியும், தமிழில் வித்வான் பட்டமும் பெற்றவர். இவர் சென்னையில் உள்ள ஆதீன பிரச்சார நிலையத்தின் பொறுப்பினை ஏற்று, சமய மாநாடுகள், சொற்பொழிவுகள் முதலியவற்றை சிறப்புற நடத்தியவர். இவர் சுமார் 48 ஆண்டுகள் சமயப்பணி, திருப்பணி, கல்விப்பணி மற்றும் சமூகப்பணிகள் பலவற்றிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர்.

அன்னாரை இழந்து வாடும் அவரது சிஷ்ய கோடிகளுக்கும், ஆன்மீக அன்பர்களுக்கும்  எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்தர் பரமாச்சாரிய சுவாமிகள் அவர்களின் ஆன்மா கயிலைநாதர் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து