பிரதமர் நரேந்திர மோடியுடன் மொரிஷியஸ் பிரதமர் சந்திப்பு

வெள்ளிக்கிழமை, 6 டிசம்பர் 2019      இந்தியா
Mauritius PM Modi 2019 12 06

மொரிஷியஸ் நாட்டின் பிரதமர் பிரவிந்த் ஜுக்னாவுத் டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

மொரிஷியஸ் நாட்டின் பிரதமர் பிரவிந்த் ஜுக்னாவுத் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருடன் அந்நாட்டின் மூத்த மந்திரிகளும் பல்வேறு துறைகளை சேர்ந்த உயரதிகாரிகளும் வந்துள்ளனர். 

இந்நிலையில், பிரவிந்த் ஜுக்னாவுத் டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின்போது இந்தியா-மொரிஷியஸ் நாடுகளுக்கு இடையிலான நல்லுறவு மற்றும் வர்த்தக தொடர்புகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து