ஹாங்காங்கில் நடைபெறும் போராட்டம்: கைது எண்ணிக்கை 6 ஆயிரத்தைத் தாண்டியது

செவ்வாய்க்கிழமை, 10 டிசம்பர் 2019      உலகம்
HongKong struggle 2019 12 10 2

ஹாங்காங் : ஹாங்காங்கில் ஜனநாயக சீர்திருத்தங்களை வலியுறுத்தி கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வரும் போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 ஹாங்காங்கில் கடந்த ஜூன் மாதம் அரசு கொண்டு வந்த கைதிகள் பரிமாற்ற சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் தொடங்கியது. நீண்ட நாட்கள் நடந்த போராட்டத்தில் பின்னர் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள்  தங்களது அடையாளங்களை மறைத்து முகமூடி அணிந்து போராட்டங்களில் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபடுபவர்களை ஒடுக்க அரசு முகமூடி அணிந்து போராட்டத்தில் பங்கேற்க தடை விதித்து உத்தரவிட்டது.

இந்நிலையில் ஹாங்காங்கில் நடைபெற்ற போராட்டத்தில், கைத்துப்பாக்கி மற்றும் பிற ஆயுதங்களை வைத்திருந்ததாக 11 பேர் கைது செய்யப்பட்டனர். இது தவிர, பெட்ரோல் குண்டுகளை தயாரித்ததாக சந்தேகிக்கப்படும் 12 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கலவரத்தில், போராட்டக்காரர்களை நோக்கி 16 ஆயிரம் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிறன்று நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தின்போது கைத்துப்பாக்கி மற்றும் பிற ஆயுதங்களை வைத்திருந்த 11 போ் கைது செய்யப்பட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்தின் போது வன்முறையில் ஈடுபடுவதற்காக அவா்கள் அந்த ஆயுதங்களை வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து