உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் மீண்டும் தலையிட விரும்பவில்லை: சுப்ரீம் கோர்ட் - தி.மு.க. முறையீடு நிராகரிப்பு

வெள்ளிக்கிழமை, 13 டிசம்பர் 2019      இந்தியா
supreme court 2019 05 07

புது டெல்லி : உள்ளாட்சித்தேர்தல் குறித்து சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பில் விளக்கம் கேட்டு தி.மு.க. தரப்பில் தாக்கல் செய்த முறையீட்டை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. இந்த விவகாரத்தில் மீண்டும் தலையிட விரும்பவில்லை என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கில் கடந்த 11-ம் தேதி சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக தி.மு.க தரப்பில் தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. தி.மு.க தரப்பில் அபிஷேக் சிங்வி வாதிடுகையில், 

கோர்ட் உத்தரவில் உள்ள irrespective என்ற வார்த்தை தொடர்பாக விளக்கம் வேண்டும். ஏனெனில் கடந்த 11-ம் தேதி உத்தரவில் 2011 கணக்கெடுப்பின்படி தேர்தல் நடத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதே வேளையில் தொகுதி மறுவரையறை, இடஒதுக்கீடு தொடர்பான எண்ணிக்கை குறித்து கணக்கில் கொள்ள தேவையில்லை என கூறப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி தி.மு.க. தரப்பு கோரிக்கையை நிராகரிப்பதாக தெரிவித்தார். மீண்டும் இந்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை, மேலும் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில் தெளிவுபடுத்த ஒன்றும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். ஏற்கனவே தமிழக அரசு தரப்புக்கு ஆஜரான வழக்கறிஞர் ரோத்தகி, தி.மு.க. அரசியல் விளையாட்டு விளையாடுகிறது என்றும் தேர்தலை நிறுத்த முற்படுகிறார்கள் என்றும் வாதிட்டார், அதை அப்போது நம்பவில்லை. ஆனால் தற்போது அவருடைய வாதத்தை நம்ப வேண்டிய சூழல் உருவாகி விடுமோ என நீதிபதி கருத்து தெரிவித்தார். தி.மு.க.வின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் தற்போது உள்ளாட்சி தேர்தல் நடத்த எந்த தடையும் இல்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து