முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கப்பலூர் சிட்கோவில் 10ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்திடும் பசுமை கப்பலூர் திட்டம்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்:

வெள்ளிக்கிழமை, 13 டிசம்பர் 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.-மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள கப்பலூர் சிட்கோ தொழிற் பேட்டையில் கப்பலூர் தொழிலதிபர்கள் சங்கத்தின் சார்பில் 10ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்திடும் பசுமை கப்பலூர் திட்டத்தினை தமிழக வருவாய், பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
திருமங்கலம் அருகேயுள்ள கப்பலூர் செயல்பட்டு வரும் சிட்கோ தொழற்பேட்டை தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தொழிற்பேட்டையாக திகழ்கிறது.இதன் மூலம் 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றன. இந்நிலையில் கப்பலூர் சிட்கோ தொழிற்பேட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சுற்றுச்சூழலை மேம்படுத்திடும் வகையில் கப்பலூர் தொழிலதிபர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதன ஒரு பகுதியாக கப்பலூர் சிட்கோ மற்றும் சுற்றுப்புற பகுதிகளை பசுமையாக்கிடும் வகையில் 10ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்திடும் பசுமை கப்பலூர் திட்டத்தினை செயல்படுத்திட முடிவு செய்யப்பட்டது.அதன்படி முதல் கட்டமாக ரூ.4லட்சம் மதிப்பீட்டில் 6ஏக்கர் பரப்பளவில் அதிநவீன சொட்டு நீர் பாசனம் மற்றும் பாதுகாப்பு வேலியுடன் 300மரக்கன்றுகள் நடவு செய்திடும் விழா நேற்று கப்பலூர் தொழிலதிபர்கள் கூட்ட அரங்கினில் நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு கப்பலூர் தொழிலதிபர்கள் சங்கத்தின் தலைவர் ரகுநாதராஜா தலைமை வகித்தார்.செயலாளர் ஆர்.வாசுதேவன்,உப தலைவர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பொருளாளர் இளங்கீரன் வரவேற்று பேசினார்.கப்பலுர் தொழிற்பேட்டை உரிமையாளர்கள்,திருமங்கலம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள்,சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்ட இவ்விழாவில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை,தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பசுமை கப்பலூர் திட்டத்தின் கீழ் 10ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்திடும் பணிகளை துவக்கி வைத்தார்.பின்னர் கப்பலூர் தொழிலதிபர்கள் அரங்க வளாகம் மற்றும் சிட்கோ பசுமை பூங்காவில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மரக்கன்றுகளை நடவு செய்து சிறப்பாக அவற்றினை பராமரித்திடுமாறு கேட்டுக் கொண்டார்.
பின்னர் விழாவில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில்: புவி வெப்பமயமாதல் பிரச்சனை உலகிற்கே பெரும் சவாலாக உள்ளது.அடுத்த தலைமுறையின் பாதுகாப்பினை உறுதி செய்யவேண்டியது நமது கடமையாக இருக்கிறது. சுற்றுச்சூழலை பராமரித்திடும் வகையில் தமிழக முதல்வரின் மேலான ஆணைக்கிணங்க அம்மா அவர்களின் ஒவ்வொரு பிறந்தநாளிலும் பல லட்சம் மரக்கன்றுகள் தமிழகம் முழுவதிலும் நடப்பட்டு வருகிறது.மரங்கள் பாகுபாடு பார்ப்பது கிடையாது.முதல்வருடன் நான் வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றிருந்த போது எங்கு பார்த்தர்லும் பச்சை பசேலென்று காணப்படுகிறது.அதனால் தான் வெளிநாடுகளில் வாழ்வோர்களுக்கு ஆயுள் கூடுதலாக உள்ளது.அதே போன்று தமிழகத்தை பசுமையாக மாற்றிடும் வகையில் முதல்வர் எடப்பாடியார் பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.குறிப்பாக நீர்மேலாண்மை திட்டத்தினை செயல்படுத்தி நமது முதல்வர் புதிய சகாப்தம் படைத்துள்ளார்.அதே போல் நீர்நிலைகளை தூர்வாருதல்,குடிமராமத்து திட்டம் மூலம் தமிழகத்திலுள்ள 40ஆயிரம் ஏரிகள் குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளது.110வது விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் செயல் வடிவம் பெற்று வருகிறது.மேலும் சட்டங் ஒழுங்கு சீராக இருப்பதால் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இது போன்ற மரக்கன்றுகள் நடும் திட்டங்களால் தமிழகம் விரைவில் பசுமை மிகுந்த மாநிலமாக மாறிடும்.இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக பசுமை கப்பலூர் திட்டத்தின் பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேடயங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இவ்விழாவில் மாவட்ட அரசு வழக்கறிஞர் தமிழ்ச்செல்வம்,திருமங்கலம் நகர் கழகச் செயலாளர் ஜே.டி.விஜயன்,திருமங்கலம் ஒன்றிய கழக செயலாளர் வக்கீல் அன்பழகன்,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன்,கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி,கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,திருமங்கலம் நகர் அவைத்தலைவர் ஜஹாங்கீர்,கட்சி நிர்வாகிகள் செல்வம்,சிவஜோதி தர்மர்,சுமதிசாமிநாதன்,வெற்றிவேல்,சாமிநாதன்,கொடிவைரன்,மாணிக்கம்,நெடுமாறன்,பாலசுப்பிரமணியன்,விவேக் மற்றும் பசுமை கப்பலூர் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முகேஷ்,கலைவாணி,கனகா,குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து