ரேப் இன் இந்தியா விவகாரம்: மன்னிப்பு கேட்க மாட்டேன் ராகுல் காந்தி மீண்டும் உறுதி

சனிக்கிழமை, 14 டிசம்பர் 2019      இந்தியா
rahul 2019 12 13

புது டெல்லி : ரேப் இன் இந்தியா எனக்கூறிய விவகாரத்தில் உண்மையை தான் பேசினேன். மரணமடைவேனே தவிர மன்னிப்பு கேட்க மாட்டேன். காங்கிரசிலிருந்து யாரும் மன்னிப்பு கேட்க மாட்டார்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசை கண்டித்து டெல்லியில், காங்கிரஸ் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா, எம்.பி.,ராகுல், பிரியங்கா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது,

நான் பேசிய பேச்சிற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பார்லிமென்டில் பா.ஜ.க. கூறி வருகிறது. சரியானதை கூறியதற்காக நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என என்னை மன்னிப்பு கேட்க சொல்கின்றனர். எனது பெயர் ராகுல் சவார்கார் இல்லை. ராகுல் காந்தி. உண்மை பேசியதற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன். காங்கிரசிலிருந்து யாரும் மன்னிப்பு கேட்க மாட்டார்கள். மரணமடைவேனே தவிர மன்னிப்பு கேட்க மாட்டேன். மோடிதான் மன்னிப்பு கேட்க வேண்டும். நாட்டிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். அமித்ஷாவும் மன்னிப்பு கேட்க வேண்டும். ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை உங்களிடம் நான் கூறுகிறேன். இன்று ஜி.டி.பி. 4 சதவீதமாக உள்ளது. ஜி.டி.பி. கணக்கிடும் முறையை மாற்றிய பிறகும் அது குறைவாக உள்ளது. ரூபாய் நோட்டு வாபசால், இந்திய பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அது இன்று வரை மீளவில்லை. இது கறுப்பு பணத்திற்கு எதிரான போராட்டம் என நீங்கள் பொய் சொன்னீர்கள். முந்தைய முறையில் கணக்கிட்டால் ஜி.டி.பி. 2.5 சதவீதத்தை தாண்டாது. நாட்டின் இன்றைய சூழ்நிலை அனைவருக்கும் தெரியும். காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் மத ரீதியில் பிரிக்க முயற்சி நடக்கிறது. அசாம், மிசோரம், மணிப்பூர், நாகலாந்து,அருணாச்சல பிரதேசம் செல்ல வேண்டும். அங்கு மோடி என்ன செய்துள்ளார் என்பதை பார்க்க வேண்டும். அந்த பகுதி முழுவதும் பற்றி எரிகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து