திண்டுக்கல் அருகே சிறுமலை அடிவாரத்தில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீவிர பயிற்சி .

26 jallikkatu

திண்டுக்கல், -        தமிழகமெங்கும் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதனையொட்டி திண்டுக்கல்லை சுற்றியுள்ள கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் களம் காணும் காளைகளுக்கு 2 மாதமாக தீவிர பயிற்சி அளிக்கப்படுகிறது.
          அந்த வகையில் திண்டுக்கல் பகுதிகளில் வளர்க்கப்படும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தற்போது பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு காளைகளுக்கு வழக்கம்போல் கொடுக்கப்படும் உணவுகளை விட சத்தான உணவுகளை கொடுத்து காளைகளை தயார் செய்து வருகின்றனர்.
         இது குறித்து ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போர் சிவமுருகன் கூறுகையில் நாங்கள் பரம்பரையாக ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறோம். இந்த காளைகளுக்கு 2 மாதமாக நீச்சல் பயிற்சி, நடைப்பயிற்சி, ஓட்டம், மண்ணை கொம்பால் குத்தி கிளறும் பயிற்சி, அருகில் யாரையும் நெருங்க விடாமல் விரட்டும் பயிற்சி என பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு காளைகளுக்கு வழக்கமாக கொடுக்கப்படும் உணவுகளை விட பருத்தி, புண்ணாக்கு உள்ளிட்ட பல்வேறு வகையான சத்தான உணவுப் பொருட்கள் கொடுக்கப்படுகிறது.
         திண்டுக்கல் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு  காலை 8 மணி முதல் மதியம் 2 மணியுடன் முடிந்து விடுகிறது. இதனால்  வெளி மாவட்டத்தில் இருந்து வரும் மாடுகள் கலந்து கொள்ள வாய்ப்புகள் குறைந்து விடுகிறது.
        எனவே மற்ற மாவட்டங்களில் காலை 8 மணி முதல் 5 மணி வரை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது போன்று திண்டுக்கல் மாவட்டத்திலும் நடத்தப்பட்டால் அனைத்து காளைகளும் பங்கேற்க வாய்ப்பாக இருக்கும்.
      இந்த ஜல்லிக்கட்டு காளைகள் திண்டுக்கல் மாவட்டத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு மற்ற மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பல்வேறு பரிசுகளை பெற்று உள்ளது. அதனைப் போன்று இந்த ஆண்டும் பல்வேறு பரிசுகள் பெறும் வகையில் காளைகளுக்கு பயிற்சி அளித்து வருகிறோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து