முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கெஜ்ரிவால் அரசுக்கு எதிராக பாஜக குற்றச்சாட்டு பட்டியல்

ஞாயிற்றுக்கிழமை, 29 டிசம்பர் 2019      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : டெல்லியில் அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான 5 ஆண்டு கால ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பட்டியலை மாநில பா.ஜ.க வெளியிட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி பொய் பிரச்சாரம் செய்து வருகிறது, மக்களை தவறாக வழிநடத்துகிறது, 2015 தேர்தலுக்கு முன் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை பா.ஜ.க முன்வைத்துள்ளது.

மத்திய அமைச்சர் ஹர்ஷ வரதன், மக்களவை எம்.பி. மீனாட்சி லெகி மற்றும் பா.ஜ.க மூத்த தலைவர்கள் இதனை வெளியிட்டனர். குடியுரிமை சட்டத்துக்கு எதிராக டெல்லியில் வன்முறை போராட்டங்களை ஆம் ஆத்மி கட்சி தூண்டிவிட்டதாக தலைவர்கள் குற்றம் சாட்டினர்.

டெல்லி சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் பிப்ரவரியில் முடிவடைகிறது. இதையொட்டி மறு தேர்தல் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து