முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி.யில் தொடரும் காட்டுத் தீ பாதிப்பு

திங்கட்கிழமை, 30 டிசம்பர் 2019      உலகம்
Image Unavailable

ஆஸ்திரேலியாவில் கடந்த சில வாரங்களாக கடுமையான காட்டுத் தீ நிலவி வருகிறது. இந்நிலையில் அந்நாட்டின் தென்மேற்குப் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் கடந்த அக்டோபர் மாதம் முதல் பல்வேறு மாகாணங்களில் காட்டுத் தீ பரவி வருகிறது. இந்தக் காட்டுத் தீக்கு இதுவரை 700 வீடுகள் இரையாகியுள்ளன. சுமார் 1.2 மில்லியன் ஏக்கர் நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் நாட்டின் பல இடங்களில் வறட்சி நிலவி வருகிறது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய ஊடகங்கள், “ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள கிழக்கு ஜிப்ஸ்லாண்ட் மாகாணத்தில் காட்டுத் தீ காரணமாக கடும் வெப்ப அலை நிலவுகிறது. இதனால்  சுமார் 30,000க்கும் அதிகமான மக்கள் அப்பகுதியிலிருந்து இடம் பெயர்ந்துள்ளனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், இப்பகுதிகளில் நிலவும் அனல் காற்று காரணமாக புத்தாண்டையொட்டி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தொடரும் காட்டுத் தீ காரணமாக வனவிலங்குகள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளதாகவும், பல இடங்களில் நீர் ஆதாரங்கள் அழிந்துள்ளதாகவும் வனவிலங்கு ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து