நத்தம் அருகே, பொங்கல் பண்டிகைக்கு தயாராகும் மண் பானைகள்

30 pongal bomt

  நத்தம்-- தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கரும்பு,மஞ்சள்,பனங்கிழங்கு,வெல்லம், உள்ளிட்ட பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்கள் விற்பனைக்கு வந்துவிட்டன. அதேபோல் பொங்கல் பானைகளும் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இந்தநிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் மண்பாண்ட பொருட்கள் தயாரிக்கும் சாணார்பட்டி- பாறைப்பட்டி, நத்தம், மீனாட்சிபுரம் போன்ற பகுதிகளில் பொங்கல் பானைகள் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பல்வேறு அளவுகளில் மண் பானைகள் தயாரிப்பு பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இங்கு தயார் செய்யப்படும் பொங்கல் பானைகள்திண்டுக்கல், ஒட்டன்சத்திரம்,வேடசந்தூர், பொள்ளாச்சி, பழனி உள்ளிட்ட மாவட்ட பகுதிகளுக்கும், கேரளாவிற்கும் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. இதில் மொத்தமாக  வாங்கி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.இந்த  பானை விலை அதன் அளவை பொறுத்து ரூ.75 முதல் ரூ.200வரை விற்பனை செய்யப்படுகிறது.இந்த வருடம் மழை நல்ல முறையில் பெய்து இருப்பதால் மண்பானை வியாபாரம் நன்றாக இருக்கும் என பானை தயாரிப்பாளர்கள் பொங்கலை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து