முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவகங்கை தெப்பக்குளத்துக்கு 2-ஆவது ஆண்டாக வந்தடைந்த பெரியாறு பாசன தண்ணீர்!

திங்கட்கிழமை, 30 டிசம்பர் 2019      சிவகங்கை
Image Unavailable

சிவகங்கை -சிவகங்கை நகர் மையப் பகுதியில் தெப்பக்குளம் உள்ளது. இந்த குளம் சிவகங்கை நகரம் உருவாகிய போது, சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கபட்ட முதல் தெப்பகுளம் ஆகும். சிவகங்கை நகரின் முக்கிய நீராதாரமாக விளங்கக் கூடிய இந்த குளத்துக்கு மழை பெய்து தண்ணீர் வருவதற்காக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் சிமெண்ட் கால்வாய் அமைத்து வழித்தடம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, வைகை அணையிலிருந்து பெரியாறு பிரதான கால்வாயில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் போது, சிவகங்கை மாவட்ட எல்லையான மலம்பட்டியில் தொடங்கும் பெரியாறு பிரதான கால்வாயான லெஷிஸ் கால்வாயிலிருந்து இடையமேலூர், கூட்டுறவுப்பட்டி, காஞ்சிரங்கால் உள்ளிட்ட பகுதிகள் வழியாக நீட்டிப்பு செய்து சிவகங்கை தெப்பக்குளத்துக்கு தண்ணீர் வரும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
 இந்த கால்வாய் வழியாக கடந்த 1996 ஆம் ஆண்டு தண்ணீர் திறக்கப்பட்டு தெப்பக்குளம் நிரப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்தாண்டு பருவமழை சரியான அளவு பெய்ததால் முல்லைப் பெரியாறு மற்றும் வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் பெரியாறு பிரதான பாசனக் கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு 22 ஆண்டுகளுக்கு பின் கடந்த ஆண்டு சிவகங்கை தெப்பக்குளம் நிரம்பியது.
இதேபோன்று, இந்தாண்டும் சிவகங்கை தெப்பக்குளத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தமிழக கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் க.பாஸ்கரனிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, சிவகங்கை தெப்பக்குளத்துக்கு தண்ணீர் திறந்து விடுமாறு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அண்மையில் உத்தரவு பிறப்பித்தார்.
இதைத் தொடர்ந்து, டிசம்பர் 28 ஆம் தேதி மலம்பட்டி பிரிவில் உள்ள லெஷிஸ் கால்வாயிலிருந்து சிவகங்கை தெப்பக்குளத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
அவ்வாறு திறக்கப்பட்ட தண்ணீர் ஞாயிற்றுக்கிழமை மாலை சிவகங்கை தெப்பக்குளத்திற்குள் வந்தடைந்தது. தெப்பகுளம் மடை நுழைவு வாயிலில் வந்த தண்ணீரை அமைச்சர் க.பாஸ்கரன், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன், வட்டாட்சியர் க.மைலாவதி, நகர் காவல் ஆய்வாளர் மோகன் உள்ளிட்ட பொதுமக்கள் ஏராளமானோர் மலர் தூவி வரவேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து