முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஞ்சி டிராபி: மும்பையை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கர்நாடகா

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜனவரி 2020      விளையாட்டு
Image Unavailable

மும்பை : சர்வீசஸ் அணிக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்த நிலையில், தற்போது கர்நாடகா அணிக்கெதிராக 5 விக்கெட்டில் தோல்வியை சந்தித்துள்ளது.

ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் மும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை - கர்நாடகா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த மும்பை 194 ரன்னில் சுருண்டது.  பின்னர் விளையாடிய கர்நாடகா 218 ரன்னில் ஆல்அவுட் ஆனது. 24 ரன்கள் பின்தங்கிய நிலையில் மும்பை 2-வது இன்னிங்சில் விளையாடியது. 2-வது இன்னிங்சிலும் தடுமாறி 149 ரன்னில் சுருண்டது. சர்பராஸ் கான் அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 71 ரன்கள் சேர்த்தார். கர்நாடகா அணி சார்பில் பிரடீக் ஜெய்ன் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இதனால் கர்நாடகா அணிக்கு 126 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தேவ்தத் படிக்கல்  50 ரன்கள் அடிக்க கர்நாடகா 5 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே சர்வீசஸ் அணிக்கெதிராக படுதோல்வியடைந்திருந்த நிலையில், தற்போது கர்நாடகா அணிக்கெதிராகவும் தோல்வியை சந்தித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து