முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் புத்தக கண்காட்சி: 9-ம் தேதி முதல்வர் எடப்பாடி திறந்து வைக்கிறார்

செவ்வாய்க்கிழமை, 7 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை  : வரும் 9-ம் தேதி சென்னையில் புத்தக கண்காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார் என ப.பா.சி. தலைவர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 43-வது புத்தக கண்காட்சி வரும் 9-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னை புத்தகக் காட்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 43-வது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வரும் 9-ம் தேதி தொடங்க உள்ள கண்காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார் என ப.பா.சி. தலைவர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது;-

புத்தகக் காட்சிக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீத தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. கல்வி நிறுவனங்களுக்கு இலவச அனுமதி சீட்டுகள் அனுப்பி வைக்க உள்ளோம். வேலைநாட்களில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். புத்தக கண்காட்சியில் கீழடி கண்காட்சி சிறப்பு அம்சமாக இடம் பெற்றுள்ளது. புத்தக கண்காட்சியில் சென்னை புத்தக கண்காட்சிக்கு நுழைவு கட்டணம் ரூ. 10 ஆகும், பள்ளி மாணவர்களுக்கு நுழைவு கட்டணம் கிடையாது என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து