ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு: ஜேபி டுமினி

திங்கட்கிழமை, 13 ஜனவரி 2020      விளையாட்டு
JP Duminy 2020 01 13

கேப்டவுன் : தென்ஆப்பிரிக்கா அணியின் ஆல்-ரவுண்டரான ஜேபி டுமினி, ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தென்ஆப்பிரிக்காவின் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஜேபி டுமினி. இவர் கடந்த 2017-ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்குப்பின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

ஆனால் 35 வயதாகும் டுமினி, டி - 20 லீக்கில் அதிக அளவில் விளையாடினார். இந்நிலையில் ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து